திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று கருட சேவையில் தேகளீசபெருமாள் அருள்பாலித்தார்.பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு இந்திர விமானத்தில் தேகளீசபெருமாள் விதியுலா நடந்தது. 11:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு, வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.இரவு 9:00 மணிக்கு, தேகளீசபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 18ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவம், 20ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.