பதிவு செய்த நாள்
18
மார்
2019
02:03
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரீஸ்வரர் கோவிலில், நேற்று (மார்ச்., 17ல்),, தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீபெரும்புதூரில், சவுந்தரவள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு, பங்குனி மாதந்தோறும் நடைபெறும் உத்திர பெருவிழா, இந்தாண்டு, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் ஒரு வாகனத்தில், சுவாமி, வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஏழாம் நாளான நேற்று (மார்ச்., 17ல்), திருத்தேர் விழா நடைபெற்றது.காலை, 7:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன், நிலையில் இருந்து தேர் புறப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். வழிநெடுகிலும், ஆங்காங்கே, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதே போல், செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், தேரோட்டம் நடந்தது.நேற்று (மார்ச்., 17ல்) காலை, 6:00 மணிக்கு, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், ஏகாம்பரேஸ்வரர், தேரில் எழுந்தருளினார்.