மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2019 03:03
மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக் கோயிலில் பங்குனித் திருவிழாவை ஒட்டி காப்புக்கட்டுதல் உற்ஸவத்தை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவின் போது மண்டகப்படிதாரர்கள் சார்பில் முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவருகிற மார்ச் 24 ந் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் காப்புக்கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள் மானாமதுரைவைகையாற்றிலிருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டி எடுத்து மேளதாளத்துடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதி எதிரே தீ மிதித்தும், பலர் மாவிளக்கு பூஜை பொங்கல் வைத்து படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துவர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.