ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு கொடி மரத்திற்கு பால், தேன், பன்னீர், தயிர், சந்தனம்,உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு காப்பு கட்டும் சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.அம்மன் தண்டியல் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 24ல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுத் தலைவர் நாகப்பன், செயலாளர் சமுத்திரம், பொருளாளர் முத்துகுமார் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.