பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2019 12:03
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடக்கும் மண்டகப்படியில், 6ம் நாள் நிகழ்ச்சி கணக்கு வேலாயி மண்டபத்தில் நடந்தது. பி.எஸ்.துரை ராமசிதம்பரம், அமராவதி அம்மாள், பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவாக மண்டகப்படி செய்யப்பட்டது.
உற்சவமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் பி.சி.சிதம்பரசூரியவேலு, பி.சி.துரைராம சிதம்பரம், பக்தர்கள் செய்தனர். தொடர்ந்து சுவாமிகள் வீதி உலா நடந்தது. -முக்கிய திருவிழாவான நாளை (மார்ச் 20) மாலை 4:30 மணிக்கு கோயிலில் தேரோட்டம் நடக்கிறது.