வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 15ம் ஆண்டு தொடக்க விழா, முரளிதர சுவாமிகள், 58 வது ஜெயந்தி விழா நடந்து வருகிறது. நேற்று (மார்ச்., 18ல்) ராதாருக்மணி, ஆரோக்கிய லட்சுமி, தன்வந்திரி உள்பட, 16 தெய்வீக திருக் கல்யாணம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமை வகித்தார். சக்தி அம்மா திருக்கல்யாண த்தை நடத்தினார். இதில், 100க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள், 100 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்றனர். பின்னர் முரளிதர சுவாமிகளுக்கு பக்தர்களால் மலர் அபிஷேகம் நடந்தது.