பதிவு செய்த நாள்
19
மார்
2019
02:03
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவங்களில் ஒன்றான தவண உற்சவம் நேற்று (மார்ச்., 18ல்) நிறைவடைந்தது. நேற்று (மார்ச்., 18ல்), மதியம், உற்சவர் வீரராகவர் மற்றும் கனகவல்லி தாயாருக்கு, திருமஞ்சனமும், இரவு தாயாருடன், பெருமாள் உள் புறப்பாடும் நடைபெற்றது.இன்று (மார்ச்., 18ல்), தாயார் உற்சவம் துவங்கி, மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இன்று (மார்ச்., 18ல்), மதியம், 4:00 மணியளவில், கனகவல்லி தாயாருக்கு, திருமஞ்சனம், மாலை உள் புறப்பாடு நடைபெறும்.
சோமவார பிரதோஷ வழிபாடுதிருவள்ளூர்: சிவன் கோவில்களில், நேற்று (மார்ச்., 18ல்), மாலை, சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.திங்கட்கிழமையில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு சோமவார பிரதோஷ வழிபாடாகும். ஈக்காடு, பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவில், பெரியகுப்பம் அருணாசலேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் .சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.நந்திக்கு சிறப்பு அலங்காரம், சிவனுக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், பஞ்சாமிர்தம, அபிஷேகம் நடைபெற்று ஆராதனைகள் நடந்தன. திரளான சிவ பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.
வள்ளலார் விழாமணவாள நகர் : திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், வள்ளலார் வளாகத்தில், பூச நட்சத்திரத்தன்று, வள்ளலார் விழா கொண்டாடப்பட்டது.மணவாள நகர், உயிரிரக்க உணர்வாளர் மன்றத்தின் சார்பில், வள்ளலார் பங்குனி மாதப்பூச விழா நடைபெற்றது. காலை, திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது.
சன்மார்க்க கொடியேற்றி, கொடி வணக்கத்தடன், அகவல் பாராயணம், சிறப்பு சொற்பொழிவு, திருக்குறள் வகுப்பு ஆகியவை நடைபெற்றன. திரளான வள்ளலார் பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.