அவிநாசி : அவிநாசி, குட்டகத்தில் உள்ள அத்தனூர் அம்மன் கோவிலில், பங்குனி முதல் சோமவாரம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. குட்டகத்தில் உள்ள அத்தனூர் அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில், பங்குனி மாதம் முழுவதும் திங்கட்கிழமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடத்தப்படும்.பங்குனி முதல் சோமவாரம் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில், பால் தயிர், தேன், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடந்தது. அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தாசர்களுக்கு தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் அரிசி பருப்பு ஆகியன படைத்து வழிபட்டனர்.