பதிவு செய்த நாள்
20
மார்
2019
12:03
அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று (மார்ச்., 19ல்) நடந்தது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருப்பூரின் பண்ணாரி என்றழைக்கப்படும், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன்
கோவில் உள்ளது. கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் (மார்ச்., 18ல்), இரவு, குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, 19ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி, மஞ்சள் நீர் கிணற்றில் குளித்து, குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று முன்தினம் (மார்ச்., 18ல்),மாலை முதலே, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 50 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்தனர்.குண்டம் திருவிழாவில், பங்கேற்க வசதியாக குன்னத்தூர், அவிநாசி, நம்பியூர், உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று (மார்ச்., 19ல்) மாலை 4:00 மணிக்கு அம்மன் தேர்பவனி நடந்தது. 300க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.