சில கோயில்களில் கரன்சி நோட்டுகளால் தெய்வத்தின் திருவுருவத்தை அலங்காரம் செய்கிறார்களே! இது முறைதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 03:03
காய், கனிகள், பட்சணங்கள் இவற்றினால் அலங்காரம் செய்தல் உண்டு. கரன்சிகளால் செய்யும் பழக்கம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதை சாஸ்திர ரீதியாக மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. அந்தக்காலத்தில் பணப்பரிமாற்றத்திற்கு தங்க நாணயங்களை உபயோகித்தனர். மதிப்புள்ள பொருட்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் தங்கக்காசு மாலையை அணிவித்தனர். அதற்கு ஈடாக இன்று கரன்சி இருக்கிறது. எண்ணெய் விளக்குக்குப் பதிலாக மின்விளக்குகளை கோயில்களில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இறைவனுக்கு கரன்சி நோட்டுகளை அர்ப்பணிக்கலாம் என்பதே என் கருத்து.