தேனி:பங்குனி உத்திரத்தையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
தேனி வேல்முருகன் கோயில், கணேச கந்தபெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர். கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பழநிமலை-சுருளிமலை பாதயாத்திரை குழு பெண்கள், பஜனை பாடல்கள் பாடினர்.
*லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையின் துவக்கப்பகுதியில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தனர். நீர்மோர் வழங்கப்பட்டது.கம்பம் வேலப்பர் கோயிலில் பங்குனி உத்திர விழாசிறப்பாக கொண்டாடப்பட்டது. முருகனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
*உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர், சண்முகநாதன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடந்தது.