திரவுபதியம்மன் கோவில் குண்டம் விழா பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2012 10:03
ஆனைமலை:ஆனைமலையில் 400 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ்விழாவையொட்டி குண்டம் இறங்கும் பகுதி தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டும், பூ வளர்க்க 15 டன் மரங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் தேர் கொடிகட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏழாம் தேதி இரவு 8.00 மணிக்கு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலமும், இரவு ஒரு மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும், 8ம் தேதி மாலை 4.00 மணிக்கு பெரிய திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 8.30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும், 9ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளன.