பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
புதுச்சேரி: பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.பெரியகாலாப்பட்டில் அமைந்துள்ள
பாலமுருகன் கோவிலில் 47ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நேற்று (மார்ச்., 21ல்) நடைபெற்றது.
விழாவையொட்டி, நேற்று (மார்ச்., 21ல்) காலை 8.00 மணிக்கு செடல் உற்சவம், பகல் 12.30க்கு பாற்சாகை வார்த்தல், மாலை 4.30க்கு தேர் உற்சவம், இரவு 9.00 மணிக்கு நாடகம் நடந்தது. செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள், உடலில் அலகு குத்திக் கொண்டு, கார், லாரி, ஜே.சி.பி., உள்ளிட்ட வாகனங்களை இழுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று (மார்ச்., 22ல்)தெப்பல் உற்சவம், நாளை (மார்ச்., 23ல்) ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், நேற்று (மார்ச்., 21ல்) காலை 7.35 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.