பரமக்குடியில் பெருமாள் - தாயார் பங்குனி திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2019 03:03
பரமக்குடி:கோயிலில் ஆண்டுதோறும்பங்குனி திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இதன் படி நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) இரவு அனுக்ஞையுடன்பூஜைது வங்கியது. நேற்று (மார்ச்., 21ல்) காலை 9:30 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள்மாப்பிள்ளை திருக்கோலத்துடன் ஆடிவீதிகளில்வலம் வந்தார்.
தொடர்ந்து பெருமாள் - தாயார் நிச்சயதார்த்தம்,மாலைமாற்றல் நடத்தப்பட்டது. பின்னர் சுந்தரராஜப் பெருமாள் -சவுந்தரவல்லித்தாயார் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில்அமர்ந்தனர்.
அப்போது பட்டாச்சாரியாரகளின் வேதமந்திரம் முழங்க பெருமாள்-சவுந்தரவல்லித் தாயாருக்கு காலை 10:15 மணிக்கு திருக்கல்யாணம்நடந்தது.
மார்ச் 24ல்மாற்றுத்திருக்கோலமும், மறுநாள் காலைஅபிஷேகம், இரவு 7:00 மணிக்கு மேல் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் பட்டணப்பிரவேஷம்நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.