பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர நட்சத்திரம் முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம் (மார்ச்., 20ல்), பங்குனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம், பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் அம்பாள் பெரியநாயகி சன்னதியில் ஸ்ரீசக்கரத்திற்கு 1008 லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
பக்தர்கள் 4 மாட வீதிகளை 16 முறை வலம் வருதல் துவங்கியது.இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து. ஊஞ்சல் உற்சவத்தில் 16 கால் மண்டபத்தில்
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இரவு 7:30 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கும், ஸ்ரீஅம்பாள் பெரியநாயகி சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இரவு 11:00 மணியளவில் மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.