நகரி: சித்துார் மாவட்டம், காளஹஸ்திரி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை, சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. 1 கோடியே, 34 லட்சத்து, 27 ஆயிரத்து, 30 ரூபாய் ரொக்கம், 474 கிலோ வெள்ளி, 109 கிராம் தங்கம் இருந்தன.