பதிவு செய்த நாள்
03
மார்
2012
11:03
மணப்பாறை அருகே வீரப்பூரில் ஸ்ரீபெரியக்காண்டியம்மன், பொன்னர், சங்கர், தங்காள் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை ஆறு மணிக்கு வேடபரி நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து பெரியக்காண்டியம்மன் திருத்தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வரும் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. விழாவில், மணப்பாறை தாசில்தார் பெரியசாமி, யூனியன் சேர்மன்கள் மணப்பாறை தனலெட்சுமி வடிவேல், வையம்பட்டி கல்பனா சேது, வீரப்பூர் ஜமீன்தார்களும், பரம்பரை அறங்காவலர்களுமான கிருஷ்ண விஜயன், பொன்னழகேசன், ராமகிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், சேது, நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் மலர்விழி, மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பூசாரிபட்டி செல்வம், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் அர்ஜுணன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதி விழாவான மஞ்சள் நீராட்டு விழா எனும் சத்தா வர்ணம் இன்று மாலை நான்கு 4.30 மணிக்கு நடக்கிறது.