வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று (மார்ச்., 24ல்) ஸ்வாதி ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமம் நடந்தது. இதையொட்டி, 108 புஷ்பங்களை கொண்டு ஹோமம் நடத்தப்பட்டது. முரளிதர சுவாமிகள், நடிகை லதா உள்பட பலர் பங்கேற்றனர். கடன் சுமை குறையும், நோய் விலகும், வேலை கிடைக்கும் போன்ற பிரச்சனைகளுக்காக, இந்த ஹோமம் நடத்தப்படுகிறது.