மரக்காணம்:மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவிமர்சையாகநடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி நேற்று (மார்ச்., 24ல்) காலை 8:00மணிக்கு மூலவர் அங்காளம்மனுக்கு பால், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்டவிசேஷபொருட்களால் அபிஷேகம், தொடர்ந்து மகா தீபாராதனைநடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12.30 மணிக்கு பூ கரக வீதியுலா நடந்தது.மாலை 4.00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து அங்காளம்மன்திருத்தேரில் புறப்பட்டு, மயான கொள்ளையை அடைந்தது. அங்கு 5.30 மணிக்கு பாவாடராயன் சூரசம்கார நிகழ்ச்சி ஐதீகமுறைப்படி நடந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன்சிறப்புஅலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.