பதிவு செய்த நாள்
25
மார்
2019
12:03
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு, பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி., ரோடு, கடைவீதி, மகாத்மா காந்திசாலை, வெளிபேட்டைதெரு, சுண்ணாம்புகார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள, விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு நேற்று (மார்ச்., 24ல்) சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.