கெலமங்கலம் சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2019 12:03
ஓசூர்: கெலமங்கலம் சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் ஜி.பி., பகுதியில், பழமையான அம்ருத்தேஸ்வரி உடனாய சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று (மார்ச்., 24ல்) காலை, 10:00 மணிக்கு அழகிய நடராஜ பெருமானின் திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் ஓதினர். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.