குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா பால் குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2019 12:03
குளித்தலை: குளித்தலை அடுத்த. பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து, பாப்பாக்காப்பட்டி காலனியில் உள்ள மாரியம்மன்கோவில் திருவிழாவையொட்டி நேற்று (மார்ச்., 24ல்) காலை, 9:00 மணியளவில் குளித்தலை கடம்பர்கோவில் காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீர் மற்றும் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக வந்தனர். இரவு, 7:00 மணியளவில் மாரியம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை சுவாமி திரு வீதி உலா நடந்தது. இதுபோல், பாப்பக்காப்பட்டி பொது மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள், காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து வந்தனர்.