பதிவு செய்த நாள்
27
மார்
2019
12:03
குளித்தலை: பேராள குந்தாளம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்களின் பால் குட ஊர்வலம் நடந்தது. குளித்தலை பஸ் ஸ்டாண்டில் உள்ள பேராள குந்தாளம்மன் கோவில் திருவிழா, கடந்த, 20ல், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 24 இரவு பூச்சொரிதல் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம், தீர்த்த குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. இன்று காலை, இளநீர் பூஜை மற்றும் கிடா வெட்டுதல் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு பூஜை வரும், 29ல் நடக்கிறது.