பதிவு செய்த நாள்
27
மார்
2019
12:03
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில், 37 லட்சத்து, 69 ஆயிரத்து, 782 ரூபாய் காணிக்கை வசூலானது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.மாசாணியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி கமிஷனர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிரந்தர உண்டியல்களில், 28 லட்சத்து, 15 ஆயிரத்து, 223 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், ஒன்பது லட்சத்து, 54 ஆயிரத்து, 559 ரூபாயும் வசூலானது. 178 கிராம் தங்கம் மற்றும் 547 கிராம் வெள்ளி இருந்தது.