திருவெண்காடு ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் பங்குனி மாத அனுஷ ஜெயந்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2019 01:03
திருவெண்காடு: காசிக்கு நிகரான ஷேத்ரம் . அங்குள்ள பிரதான ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ள ஸ்ரீ ராமமட வேத வ்யாசராமம் என்ற வேத பாடசாலையிலுள்ள ஸ்ரீ மஹாபெரியவா திருக்கோவிலில் அனுஷ ஜெயந்தி மிகவும் விமர்சையாக இன்று (மார்ச்., 27ல்) கொண்டாடப்பட்டது. ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் எழுந்தருளியிருக்கும், காமாட்சி அம்மன் மூல விக்கிரஹம், வேத வியாசர், ஆதி சங்கரர் மற்றும் ஸ்ரீ மஹா பெரியவா உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆவஹத்தி ஹோமம், வேதகோஷத்துடன் நடைபெற்றது . தொடர்ந்து நாதஸ்வர இசையுடன் மேளதாளங்கள் ஒலிக்க மஹா தீபாராதனையும் மிக விமரிசையாக நடந்தேறியது .
கோபூஜை, ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள பிரதான மாட வீதிகளில் ,வேத வியாசர், ஆதி சங்கரர் மற்றும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா உற்சவ மூர்த்திகளின் வீதியுலா யானை முன்வர நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க பக்தர்களின் நாம சங்கீர்த்ததுடன் நிறைவுற்றது.
சென்னை மற்றும் பெங்களூருலிருந்து 200க்கும் மேற்பட்ட ஸ்ரீ மஹா பெரியவா பக்தர்கள் நேரில் வருகை புரிந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுகிரஹத் திற்கு பாத்திரமானார்கள். இதற்கான பேருந்து மற்றும் ரயில் பயண வசதி ஏற்பாடுகளை ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் நிர்வாகிகள் பிரதி மாதம் ஒவ்வொரு அனுஷ ஜெயந்திக்கும் இலவச மாக செய்து வருகின்றனர். மற்றும் அவர்களுக்கு தங்க இடவசதியும் ஸ்ரீ சங்கராபுரத்தில் செய்து தரப்படுகிறது.