நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2019 12:03
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.பிறகு கைலாசநாதருக்கு சங்காபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை பாக்யராஜ் பூசாரி, முருகானந்தம் குருக்கள் செய்தனர்.