பதிவு செய்த நாள்
27
மார்
2019
02:03
சேலம்: சேலம், வின்சென்ட், எல்லைப்பிடாரி அம்மன் கோவில், பங்குனி திருவிழாவுக்கு, கடந்த, 19ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்றிரவு 26ல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் ஆகியவை நடந்தன. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி மீது பூக்கள் தூவி தரிசனம் செய்தனர். ஏப்., 2 இரவு, மாவிளக்கு, 3ல் பொங்கல் வைபவம், 4ல் அக்னி குண்டம், 5ல் பால்குட ஊர்வலம், வண்டிவேடிக்கை, 6ல் சத்தாபரணம், 7ல் மஞ்சள் நீராட்டம், ஏப்., 8 குத்து விளக்கு பூஜை நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
பால்குட ஊர்வலம்: கொளத்தூர், பாலவாடி, மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேற்று 26ல், காலை, பால்குட ஊர்வலம் நடந்தது. கோட்டையூர் காவிரியாற்றிலிருந்து, ஏராளமான பக்தர்கள், பால்குடம் எடுத்து, காவேரிபுரம் வழியாக, 4 கி.மீ., தூரம் ஊர்வலமாக, மாரியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.