தேவகோட்டை:தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி செவ்வாய் விழா நேற்று (மார்ச்., 26ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.மாரியம்மனுக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று (மார்ச்., 26ல்) மாலை முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் அம்மனுக்கு காலை,மாலை இரு வேளையும் சிறப்பு அபிஷேகம் ,சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏப். 2 ல் முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல், பால்குடம், காவடி எடுத்தல் நடைபெறும். ஏப். 3 ல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.