ஆவடி: ஆவடி அருகே அண்ணனூர், கங்கையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் (மார்ச்., 25ல்) இரவு, தர்மகர்த்தா பொன்னன், கோவில் நடையை சாத்திவிட்டு சென்றார்.நேற்று (மார்ச்., 26ல்) காலை மீண்டும் கோவிலை திறக்க சென்ற போது, வளாகத்தில் இருந்த துர்க்கையம்மன், நாராயணம்மன் உருவ கற்சிலைகளை, மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தெரிய வந்தது.திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.