திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு உற்ஸவ சாந்தியில் அபிஷேகம், பூஜை நடந்தது. கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். 11 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுவாமிக்கு தங்ககுடம், தெய்வானைக்கு வெள்ளி குடங்களில் இருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி, அம்மன் ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தனர்.