பதிவு செய்த நாள்
29
மார்
2019
12:03
கோவை:ஆன்மிக கல்வி மற்றும் சமூக பணிகளில், சிறந்த சேவை ஆற்றியதற்காக, மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கர்நாடகாவின் மைசூர் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், டாக்டர் பட்டம் வழங்குவதாக
அறிவிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ள, அமிர்தபுரி ஆஸ்ரமத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாதா அமிர்தானந்தமயிக்கு, மைசூர் பல்கலையின் துணைவேந்தர் ஹேமநாத குமார், அதிகாரபூர்வமாக கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய மாதா அமிர்தானந்தமயி தேவி, "சேவைக்கு உறுதுணையாக உலகெங்கிலும், உள்ள என் குழந்தைகளின் நல்லெண்ணத்துக்கும், ஆழ்ந்த நேர்மைக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன், என்றார்.இதில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஸ்வின் குமார் சவுபே, கேரள பல்கலையின் துணைவேந்தர் மாதவன் பிள்ளை, மைசூர் பல்கலை பதிவாளர் லிங்கராஜ காந்தி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.