கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.15ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2019 11:03
அலங்காநல்லுார் : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் தொடங்குகிறது. தொடர்ந்து 2 நாட்கள் சுவாமி புறப்பாடு நடக்கும். ஏப்.,17 மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிக்குள் மதுரைக்கு தங்கபல்லக்கில் சுவாமி புறப்படுகிறார். 18ம் தேதி அதிகாலை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். 19ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.
அன்றிரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சுவாமி எழுந்தருளுகிறார். 20ம் தேதி அங்கிருந்து சஷே வாகனத்தில் புறப்பாடாகி தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறும். 21ம் தேதி அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளித்து, அன்று பகல் ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி, சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. 22ம் தேதி அழகர்மலை நோக்கி சுவாமி செல்கிறார். 23ம் தேதி காலை 10:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் இருப்பிடம் சென்றடைகிறார்.