பதிவு செய்த நாள்
30
மார்
2019
12:03
ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு காளியம்மன் கோவில் உண்டியல், மூன்று மாதத்துக்கு ஒருமுறை காணிக்கை எண்ணப்படுகிறது. கடந்த மாதம், குண்டம் திருவிழா நடந்தது. இந்நிலையில், உண்டியல்கள் நேற்று 29ல், திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. மொத்தம் எட்டு உண்டியல்களில், மூன்று லட்சத்து, 94 ஆயிரத்து, 510 ரூபாய், 32.05 கிராம் தங்கம், 92.03 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார், ஆய்வாளர் பாலசுந்தரி, பரம்பரை அறங்காவலர் தங்காயம்மள் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.