பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
12:04
ஈரோடு: பெரிய மாரியம்மன் வகையறா கோவில் விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம், அக்னிசட்டி, அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா, விமர்சையாக நடந்தது வருகிறது. மூன்று கோவில்களிலும் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு, தினமும் பக்தர்கள், மக்கள், புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். சுமை தூக்குவோர் சங்கம், ஜவுளி வியாபாரிகள், கே.என்.கே.ரோடு மக்கள், கோட்டை மக்கள், தனித்தனி குழுவாக ஆயிரக்கணக்கான மக்கள், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர். வேல் அலகு, மயில் அலகு, முதுகு அலகு குத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். காவிரி ஆற்றங்கரையில் தொடங்கிய ஊர்வலம், கருங்கால்பாளையம், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, கனி மார்க்கெட், பி.எஸ்.பார்க் வழியாக கோவிலில் முடிந்தது. வரும், 3ல் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேரை தயார்படுத்தும் பணியும் நேற்று தொடங்கியது.