பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
12:04
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த, விசூர், திரவுபதியம்மன் கோவிலில், மஹா சாந்தி திருமஞ்சனம் நேற்று நடந்தது.மஹா சாந்தி திருமஞ்சனத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை, புன்யாஹவாஸனம், வாஸ்து ஹோமம் நடந்தது.
நேற்று, காலை, 8:00 மணிக்கு, விஸ்வரூபம், கோ பூஜை, புன்யாஹவாஸனம், மஹா சாந்தி ஹோமம், மஹா தீபாராதனையும் அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, 6:00 மணிக்கு, உத்திரமேரூர், மானாம்பதி நடராஜ நாட்டியாலயா பள்ளி, பரத நாட்டிய குழுவினரின் நடன நிகழ்ச்சி நடந்தது.அதை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திரவுபதியம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா சென்ற அம்மனுக்கு, வழிநெடுகிலும், பக்தர்கள் தீபாராதனை செய்து அம்மனை வழிபட்டனர்.