மூணாறு: மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட்,லோயர் டிவிஷனில் பார்வதி அம்மன் கோயிலில் நடந்து வரும் மண்டலகால சிறப்பு பூஜையை ஒட்டி பக்தர்கள் தீர்த்தக்காவடி , மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனில் புதிதாக கட்டப்பட்ட பார்வதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 17 ல் நடந்தது.அன்று முதல் 41 நாட்கள் மண்டல சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.அதன்படி 21ம் நாள் பூஜை, மூணாறைச் சேர்ந்த சண்முகநாதன் தலைமையிலான பழநி பாதயாத்திரை குழு சார்பில் நடந்தது.அக்குழு உற்சவருக்கு என ரூ.80 ஆயிரம் செலவில் பார்வதியம்மன் உருவில் வெண்கல சிலை வழங்கி, சிறப்பு பூஜைகளை நடத்தினர். பக்தர்கள் தீர்த்தக்காவடி, மாவிளக்கு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அன்னதானமும் நடந்தது.