திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2019 12:04
சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி விழா துவங்கியது. சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்க, இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார். ஏப்ரல் 5 ல் நடக்கும் ஆறாம் விழாவின்போது காலையில் அம்மன் தண்ணீர்பந்தல் மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். 7 ம் நாளில் புஷ்ப பல்லக்கில் சயன கோலத்தில் சீர்வரிசைகளுடன் வீதி உலா , யானை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். 8 ம் நாள் காலையில் பக்தர்கள் கோயிலின் முன்பு பொங்கலிட, அன்று மாலை அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரியம்மன் கோயிலின் முன்பு வேட்டைக்கு செல்லுதலும் , தொடர்ந்து குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும். 9ம் நாள் நாள் நடக்கும் கயிறுகுத்து விழாவில் பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 10 ம நாள் தேரோட்டம் நடைபெறுகிறது .இதே போன்று திருத்தங்கல் எட்டு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவும் கொடியேற்றத்துடன் துவங்கியது.