கும்பகோணத்துக்கு அருகில், திருப்பனந்தாள் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார் பிணம் மீட்ட பிள்ளையார். குங்கிலியக்கலயநாயனார் தனது இறந்துபோன மகனை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, விநாயகர் வலம் வந்து அவர்களை வழிமறித்து திருப்பனந்தாள், நாகக் கன்னிகை தீர்த்தத்தில் நீராடி விட்டுச் செல்லும் படி கட்டளையிட்டார். அவர்கள்நீராடி, வீடு வந்து சேர்ந்ததும் இறந்த மகன் உயிருடன் வந்தான். இறந்தவனை உயிருடன் மீட்டதால் இந்த விநாயகர், ‘பிணம் மீட்ட பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.