ஒரு முறை, பகவான் ரமணர் பக்தர்களுடன் சாப்பிட அமர்ந்தார். அப்போது நெல்லூரிலிருந்து வந்திருந்த அன்பர் ஒருவர் அருகில் வந்து, “எனக்குச் சிறிது பிரசாதம் கொடுங்கள்” என்று கேட்டார். ஆனால் ரமணர், “சாப்பிடுபவன்... ‘நான்’ என்ற எண்ணம் இல்லாமல் சாப்பிட்டால் அதுவே பிரசாதம்தான்!” என்று கூறிவிட்டார். பிறகு சாப்பிட்டு முடிந்ததும் அந்த அன்பரை அழைத்த ரமணர், “உங்களுக்குப் பிரசாதம் தந்தால், மற்றவர்களும் என்னிடம் பிரசாதம் கேட்பார்கள். அப்படி எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் எனது இலையில் ஒன்றும் மிஞ்சாதே!” என்று குறிப்பிட்டவர், “எனது இலையில் இருக்கும் உணவில் ஒரு பிடியைப் பிரசாதமாக சாப்பிடுவதில் என்ன சிறப்பு இருக்கிறது? இதுவா பக்தியைக் காட்டுகிறது? உள்ளத்தில் பக்தி இருக்க வேண்டும். அதுவே நிறைவானது; அதுவே போதுமானது” என்றார்.