திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நித்திய கல்யாணி அம்மன் உடனுறை வரகுண்பாண்டீஸ்வரர் திருக்கோயில். பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த விரளி மஞ்சள் இக்கோயிலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த விரளி மஞ்சளை இடித்துப் பொடி செய்து அம்மனுக்குக் காப்பிட்டு, அதையே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த மஞ்சள் பிரசாதம் கெட்டுப் போவதில்லை என்பது விசேஷம்.