பெங்களூருவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது சிவகங்கா எனும் கிராமம். இந்த கிராமத்தின் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் கவிகங்காதீஸ்வரர். இந்தக் கோயில் சுவாமி அபிஷேகத்துக்காகக் கொடுக்கப்படும் நெய், அபிஷேகம் முடிந்து அது பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கும்போது வெண்ணெயாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்கிறது. இந்த வெண்ணெய் பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.