குமரி மாவட்டம், திருவட்டார் என்னும் இடம் நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகவும், பதின்மூன்று மலை திருப்பதிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இத்திருக்கோயிலில் ஆதிகேசவப் பெருமாள் மூன்று வாசல்கள் வழியாக பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். ‘கடுகு சர்க்கரை யோகம்’ என்னும் மூலப்பொருளினால் செய்யப்பட்டுள்ளதால், பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது.