மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை விழா ஏப்.15ல் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2019 11:04
மானாமதுரை : சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருகிற ஏப்.15 ந் தேதி காப்பு கட்டுடன் சித்திரை திருவிழா துவங்குகிறது.மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
விழா நடைபெறும் நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளுவார்.விழாவின் துவக்கமாக ஏப்.1ந் தேதி சுந்தரராஜப் பெருமாளின் கைகளில் காப்பு கட்டப்பட்டு பின்னர் அபிஷேக ஆராதனைகளுடன் விழா துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர் சேவை வரும் 18 ந் தேதி இரவு 10:00 மணியிலிருந்து 11:00 மணி வரைக்கும்,19ந் தேதி காலை 6:00 யிலிருந்து 7:05 மணிக்குள் ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கும் விழாவும், நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அதிகாரிகள் இளங்கோ, சரவணன், பரம்பரை ஸ்தானீகர்கள் கிருஷ்ணதாஸ், பாபுஜி சுந்தர் ஆகியோர் செய்து வருகின்றனர்.