பதிவு செய்த நாள்
03
ஏப்
2019
01:04
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள, சொக்கனூர் மதுரைவீரன் - பட்டத்தரசியம்மன் கோவில் நேற்று (ஏப்., 2ல்) பூச்சாட்டு விழா நடந்தது.
கிணத்துக்கடவு அடுத்த சொக்கனூரில், மதுரைவீரன் - பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழா நேற்று (ஏப்., 2ல்) பூச்சாட்டுதலுடன் துவங்கியது.விழாவில், தீர்த்தம் கொண்டு வருதலும், மாலையில் சக்தி கரகம் அழைப்பும் நடந்தது. இன்று, (ஏப்., 3ல்) காலை, 7:00 மணிக்கு கோவிலு க்கு குதிரை வாகனம் கொண்டு வருதல், காலை, 10:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தலும் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, கலை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, 4ம் தேதி மஞ்சள் நீராடலும், 5ம் தேதி சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடும் நடக்கிறது.