தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2019 12:04
தேவகோட்டை : தேவகோட்டை அருகே கோட்டூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி செவ்வாய் விழா மார்ச் 25ல் கொடியேற்றம், காப்புகட்டுதலுடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் ,பூஜை நடந்தது. இரண்டாம் நாள் கோவிலில் முளைப்பாரி விதை இடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து கிராமத்தினர் தங்கள் வீடுகளில் முளைப்பாரி இட்டனர். பெண்கள் விளக்கு பூஜை நடத்தியும், முளைக்கொட்டியும் வழிபட்டனர். செவ்வாய்கிழமை பால்குடம், காவடி,வேல்காவடி எடுத்து வந்த நேர்த்திக்கடன் செய்தனர்.
அதனை தொடர்ந்து அபிஷேகம் ,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கிராமத்தினர் வீட்டில் இட்ட முளைப்பாரியை கோவிலில் கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்.தமிழ்நாடு அரசு பஸ் போக்குவரத்து கழக தேவகோட்டை கிளை அனைத்து பிரிவு தொழிலாளர்கள் சார்பில் தேவகோட்டை கிளையிலிருந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூக்களுடன் கோட்டூருக்கு ஊர்வலமாக சென்று கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் செய்து வழிபட்டனர்.