மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2019 12:04
மானாமதுரை: எல்லை தெய்வமாக கருதப்படும் எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் ஏராளமானோர் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
மானாமதுரை ஆனந்தவல்லிசோமநாதர் கோயில் சித்திரை திருவிழா வருடந்தோறும் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த வருடம் வரும் 10 ந்தேதி திருவிழா துவங்கவுள்ளது. இந்நிலையில் ஊரின் எல்லை தெய்வமாக போற்றப்படும் எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் திருவிழா நடத்தப்பட்டு இங்கு விழா முடிந்தவுடன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவங்குவது வழக்கம்.கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் காப்பு கட்டப்பட்டு திருவிழாதுவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவில் நேற்று முன்தினம் (ஏப்., 2ல்) அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் உற்ஸவர் சிலை தேரில் வைக்கப்பட்டு வீதிவுலா நடைபெற்றது.விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.