பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
12:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பங்குனி பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான நேற்று (ஏப்., 3ல்), தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட, காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி பிரம்மோற்சவம், மார்ச், 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார்.
ஏழாம் நாள் உற்சவமான, நேற்று (ஏப்., 3ல்) காலை, தேரோட்டம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் யதோக்தகாரி பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். டி.கே.நம்பி தெரு வழியாக, வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெரு சென்ற தேர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது.