பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
02:04
கோவை : மதுக்கரை பத்ரகாளி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், பக்தர்கள் நேற்று (ஏப்., 3ல்) குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.பாலக்காடு ரோடு, மதுக்கரை, காந்தி நகரில் அமைந்துள்ளது,
பத்ரகாளி அம்மன் கோவில். நூறாண்டு பழமை வாய்ந்த இக்கோவில் குண்டம் திருவிழா, மார்ச் 27ல் துவங்கியது; வரும், 10ம் தேதி வரை நடக்கும் விழாவில், குண்டம் திறந்து பூஜை செய்யப் பட்டது. நேற்று (ஏப்., 3ல்)அதிகாலை, 5:30 மணிக்கு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இன்று (ஏப்., 4ல்) காலை, 10:00 மணிக்கு, காட்டு கோவிலில் பரண் பூஜையும், மதியம், மஞ்சள் நீராட்டும், வீதியுலாவும் நடக்கின்றன. வரும் 10ம் தேதி காலை, மாவிளக்கு அழைத்தலும், மதியம், அலங்கார பூஜை மற்றும் சித்தன் பூஜையும் நடக்கிறது.