செஞ்சி:அகலுார் ஜெயின் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.செஞ்சி தாலுகா, அகலூர் கிராமத்தில் உள்ள தரணேந்திர பத்மாவதி ஜெயின் கோவிலில், தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. முன்னதாக விழாவையொட்டி, தரணேந்திரர், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தரணேந்திரர், பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். ஏராளமானோர் வடம் பிடித்த தேரோட்டம், ஜெயினர் தெருக்கள் வழியாக வலம் வந்தது. ஏற்பாடுகளை உபயதாரர் அப்பாண்டைராஜன் மற்றும் ஜெயின் சமூகத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான சிராவக, சிராவகியர்கள் கலந்து கொண்டனர்.