காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு வருவாய் ரூ.9.32 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2019 12:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியலில், 9.32 லட்சம் ரூபாய், பக்தர் களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், திங்கட்கிழமை தோறும் பரிகாரத்திற்காக வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படும்.அதன்படி, கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் ஜெ.சுரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 9.32 லட்சம் ரூபாய், 17 கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன.